ரசின் திட்டங்களையும், செயல்பாடு களையும், பொதுமக்களின் எளிதில் அறிந்து கொள்ளவும், பொதுமக்கள் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பங்கு இன்றியமையாதது. செய்தி மக்கள் தொடர்புத் துறை, பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைத்துத் தரப்பினருடன் எளிதில் தொடர்பு வைத்துக்கொள்ளும் துறையாகும். துறை அலுவலர்கள் சிறப்பான முறையில் தங்களது பணியை ஆற்றும்போது அரசினால் செயல் படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் பொதுமக்கள் எளிதில் அறிந்து பயன் படுத்துவதற்கு வசதி ஏற்படும். ஆனால் தங்களுக் குள் சண்டை யிட்டுக்கொண் டால் அரசின் திட்டங்கள் மக்களுக்கு எவ்வாறு சேரும்?

வரலாற்றுரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் தவிர்க்கமுடியாத தென் மாவட்டம் அது. அந்த மாவட்டத்தில் பி.ஆர்.ஓ.வாக இருப்பவருக்கும், ஏ.பி.ஆர்.ஓ.வாக இருப்பவருக்கும் நடைபெறும் ஈகோ யுத்தம்தான் அரசையே பாதிப்படைய வைத்துள்ளது. இது உளவுத்துறை வழியாக மாநில தலைமைக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. மாநில உளவுத்துறை எழுதிய அந்தக் குறிப்பில், "மாண்பு மிகு அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் ஆய்வுகள், துறைரீதியான அறிவிப்புகள் போன்றவற்றை பொதுமக்களிடம் கொண்டுசேர்ப்பதில் பெருத்த சுணக்கம் ஏற்பட் டுள்ளது. 

ஒவ்வொரு துறைவாரியாக வெளியிடப்படும் அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிடுவதற் கான தனியாக ரேட் பிக்ஸ் பண்ணி வசூலில் ஈடுபடு கின்றது மாவட்ட செய்தித்துறை. கண்டிக்கவேண்டிய பி.ஆர்.ஓ. தினசரி அலுவலகத்திற்கு வருவதில்லை. வாரத்திற்கு ஒருமுறை பார்ப்பதே அரிது. 

Advertisment

இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றும் ஏ.பி.ஆர்.ஓ. ஒருசில பத்திரிகையாளர்களை கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக தன்னை கவனிக்காத துறை அலுவலர்கள் மீது தவறான செய்திகளை வெளியிட்டு, அதை சரி செய்கிறேன் என தெரிவித்து அலுவலக சிறப்பு சன்மானமும் பெற்றுக்கொள்வதாக தகவல். காலை 11 மணிக்கு அலுவலகம் வரும் ஏ.பி.ஆர்.ஓ. 2 மணி வரை அலுவலகத்தில் இருந்தாலே பெரிது. குறிப்பாக அரசு நிகழ்ச்சிகள் காலையில் முடிந்தாலும் இரவு ஏழு மணிவரை செய்தி வெளியிடுவதில்லை. செய்தியாளர்கள் அவரைத் தொடர்புகொண்டு கேட்கும்பொழுது மாவட்ட ஆட்சியர் செய்தியினைத் திருத்தித் தரவில்லை என தெரிவிக்கின்றனர். இதனால் உரிய தகவல்களுடன் செய்திகளை வெளியிட இயலாமல் செய்தியாளர்கள் தவித்துவருகின்றனர்'' என்கின்றது.

செய்தித்துறை அலுவலக அதிகாரி ஒருவரோ, "வருமானம் உள்ள துறை நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்று பி.ஆர்.ஓ. செய்தியாளர்களுக்கு கொடுக்கவேண்டும் என, பெரிய தொகையினை பெற்றுக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார். பிற செய்தியாளர்கள் சென்று கேட்கும்போது    ஏ.பி.ஆர்.ஓ. அவர்களிடம் கொடுத்துவிட்டதாக சொல்லுவார்கள். பி.ஆர்.ஓ.விற்கு மாவட்டத்தில் என்ன நிகழ்வு நடக்கிறது என்பதே தெரிவதில்லை. அதையும் மீறி தகவல் கேட்டால் கேட்டுச் சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு இரண்டு நாட்களுக்கு போனை எடுப்பதே இல்லை. உரிய தகவலும் தெரிவதில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த போதும் பழைய நிலைமை இன்னும் மாறவில்லை. 

அரசின் செயல்பாடுகளை பொதுமக்களிடையே கொண்டு செல்வதில் இவர்களுக்குள்ளே வசூல் போட்டிகள் நிலவுவதால் பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று முடித்தவுடன் மந்திரி தரப்பிலிருந்து பெருந்தொகையை பெற்றுக் கொண்டு யாருக்கும் தெரியாமல் ஏ.பி.ஆர்.ஓ. எஸ்கேப் ஆகிவிட்டார். 

Advertisment

இதுகுறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் தெரிவித்தபோது அமைச்சரே நேரடியாக பி.ஆர்.ஓ.வை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டு கண்டித்தது இங்கு அனைவருக்கும் தெரியும்'' என்கின்றார் அவர்.

"சமீபத்தில் பிளவர் ஷோவில் செய்தி யாளர்களை அழைத்துச் செல்வதற்கும், அவர்   களின் மதிய உணவிற்கும் என, தனியாக ஒரு தொகையினை சுற்றுலா அலுவலரிடம் ஏ.பி.ஆர்.ஓ. கறந்துவிட்டார். ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவரே வாகனம், உணவிற்கு தனியாக ஏற்பாடு செய்து தந்துள்ளார். இதை மறைத்து பெருந்தொகையினை பெற்றுக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார் ஏ.பி.ஆர்.ஓ. இதுபோல் வட்டாட் சியர் அலுவலகத் திறப்புவிழாவின்போது செய்தியாளர்களுக்கு கொடுக்கவேண்டும் எனக் கூறி 20 ஆயிரத்தினை பொதுப்பணித்துறை அலு வலர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு எஸ்கேப்பாகியதும் கலெக்டர் கவனத்திற்கு சென்றுள்ளது. 

நடவடிக்கை இருக் குமா? என்பதுதான் அனை வரின் கேள்வி. பூனைக்கு யார் மணி கட்டுவார்?

-நா.ஆதித்யா